பலமான கொவிட் வைரஸ் உருவாகும்:திஸ்ஸ விதாரண!

உலகில் தற்போது பரவியுள்ள வைரஸை விடவும் பலமான கொவிட் வைரஸ் உருவாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக உருவாகவுள்ள வைரஸுக்கென எதிர்காலத்தில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஊடகமொன்றுக்கு வெளியிட்டுள்ள கருத்திலேயே பேராசிரியர் திஸ்ஸவிதாரண இதனை கூறியுள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகளின் மூலம் தற்போது பரவியுள்ள கொவிட் வைரஸை 95 வீதம் கட்டுப்படுத்த முடியும்.எனினும் எதிர்காலத்தில் உருவாகும் வைரஸ் திரிபுகளுக்கு புதிய தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டி வரும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றானது வெளவால்கள் மூலம் பரவியதாக சில விசேட நிபுணர்கள் கூறும், நிலiயில், அதனை தான் நிராகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments