மந்திர மாங்காய்:மீண்டும் கப்ரால் மத்திய வங்கிக்காம்!மந்திரத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியுமென்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் கோத்தா அரசு முன்னெடுத்துவருகின்றது.

முன்னதாக பஸிலை அமைச்சராக்கி நிதி நிலமையை மேம்படுத்த போவதாக சொல்லி வந்த தரப்பு தற்போது மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் கப்ராலை கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவ்வகையில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அவர், மீண்டும் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவலை, இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய நிதி மோசடிகளை மகிந்த தரப்புடன் இணைந்து முன்னெடுத்த கப்ரால் கடந்த ஆட்சியில் கைதாகியிருந்தமை தெரிந்ததே.


No comments