தேசிய மக்கள் சக்தி விரட்டப்பட்டது!

 


இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் எதிர்பார்ப்புக்கு மாறாக பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் பெருவாரியான வெற்றியை பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து உள்ளுராட்சி தேர்தலிலும் அத்தகைய வெற்றியை பெறுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

எனினும் தென்னிலங்கையில் வெற்றியை தக்க வைக்க முடிந்த தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை முழுவதுமாக 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள்  போட்டியிட்டிருந்தனர்.

தேர்தலில் வாக்களிக்க 17,மில்லியன் வரையிலான வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் யாழ்ப்பாணம் 56.6℅  முல்லைத்தீவு - 61.32 மன்னார் - 70.15 மற்றும் வவுனியா - 59.65 கிளிநொச்சி – 61வாக்குகளே பதிவு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் மட்டக்களப்பு – 61 திருகோணமலை – 67 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments