இலங்கை:பாடசாலைகளை திறப்பது பற்றி ஆலோசனை!

 


இலங்கையில் கடந்த நான்கு மாதங்களிற்கு மேலாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை (24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில், இன்று பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டங்களில் சுகாதார அதிகாரிகளும் பங்குபற்றுவர்.

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாளை (24) அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


No comments