நாமலிற்கு காட்டுவதில் போட்டி!

 


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை(?) கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமலிற்கு சுற்றிக்காட்டுவது யாரென்பதில் போட்டி பங்காளிகளிடையே முற்றியுள்ளது.

நாமலின் விஜயத்தின்போது கொழு;பிலிருந்து ஓடோடி வந்திந்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்,  பாராளுமன்ற  குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் அமைச்சருடன் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர். 

எனினும் அமைச்சர் டக்ளஸ் தரப்பினரோ அவரது மேலதிக இணைப்பாளர்களோ கலந்துகொண்டிருக்கவில்லை.

இதேவேளை வழமையாக நாமலிற்கு சுற்றிக்காட்டும் பொதுஜன பெரமுன உள்ளுர் தலைவர்களும் எட்டிப்பார்த்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வுழமையாக நாமல் மட்டத்தில் வடக்கிற்கான அரச பிரதிநிதிகளது வருகை முடங்கியுள்ள நிலையில் அவரை வைத்து அரசியல் பிரபலம் தேட பங்காளிகளது போட்டி உச்சமடைந்துள்ளது.


No comments