செத்தவீட்டு அரசியலில் சுமா அன் கோ பிசி!புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஜநாவிற்கு சிபார்சு செய்ததன் மூலம் மூக்குடைபட்ட எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஊடக நிறுவனங்கள் படியேறி வெள்ளையடிக்கவேண்டிய துன்பியல் தொடர்கின்றது.ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் அலைய மறுபுறம் அவரது தொண்டன் சாணக்கியனும் படியேறும் அவலம் தொடர்கின்றது.

அரச ஆதரவு ஊடகத்தில்  ஒருநாள் எம்.எ.சுமந்திரன் அரங்கேற அடுத்த தினம் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஓடிவந்து தானும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டிய துன்பம் தொடர்கின்றது.

இந்நிலையில் கப்டன் பண்டிதருக்கு தேடி சென்று விளக்கேற்றி விட்டு அவரது போர்க்குற்றத்தையும் விசாரிக்க சொன்ன எம்.ஏ.சுமந்திரன் அன்கோ அடுத்து செத்தவீட்டு அரசியலில் குதித்துள்ளனர்.

இளம் ஊடகவியலாளாரும், சமூக பற்றாளருமான பிரகாஸ் ஞானப்பிரகாசத்தினை கொரோனா பலிகொண்டுவிட்டதாக கவலை தெரிவித்துள்ளதுடன் மரணத்தின் பின்னர் வீடு தேடி சென்றுள்ளது இத்தரப்பு.

வெள்ளாம்போக்கட்டியில் உள்ள அவரின் வீட்டிற்கு  நானும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாவகச்சேரி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சயந்தன் சகிதம் நேரடியகச் சென்று அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும் நோயுற்ற குறித்த இளைஞனின் கடந்த காலத்தில் ஒருநாள் கூட இத்தரப்புக்கள் எட்டிப்பார்த்திருக்கவில்லையென குடும்பம் தெரிவிக்கின்றது.


No comments