மட்டக்களப்பில் 88 வீதமானோருக்கு டெல்ரா!மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா தொற்றின் ஆரம்ப நிலை இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலயத்தில்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டக்களப்பில் 264 ஆக அதிகரித்துள்ளது


No comments