இரண்டு நாளேயான சிசுவுக்கும் கொரோனா!



பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாயின், அதற்கு முன்னர் உரிய வகையில் திட்டங்களை முன் கூட்டியே உருவாக்கி, அதனை பகிரங்கப்படுத்துவது பொருத்தமான என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள், அதனை எவ்வாறு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய, முன்னெடுப்பதென திட்டமிட்டு, அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருந்தார்கள் என்றால், நாட்டை திறப்பதில் பிரச்சினை இல்லை என்றார்.

அவ்வாறில்லை என்றால் நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஏற்படும். நாட்டை திறப்பதனுடாக முன்னெடுக்கப்படும் சமூகப் பொருளாதார செயற்பாடுகளால் கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் பரவாதிருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments