தவறி விழுந்தவரைக் காப்பாற்ற முயன்றபோது ரஷ்ய அமைச்சர் உயிரிழந்தார்


ஆட்டிக் பகுதியில் அவசரகால பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது 55 வயதுடைய ரஷ்யாவின் அவசரகால அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ் எதிர்பாரத நிகழ்வில் உயரிழந்துள்ளார்.

பாறையின் உச்சியில் ஒரு ஒளிப்பதிவாளர் விழுந்த போது அவரைக் காப்பாற்ற முயன்றபோது அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ்  உயரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு சைபீரியாவில் உள்ள புடோரனா இயற்கை காப்பகத்தில் உள்ள கிடாபோ ஓரன் நீர்வீழ்ச்சியில், நோரில்ஸ்க் நகருக்கு மேற்கே சுமார் 165 கிமீ (100 மைல்) தொலைவில் இந்த விபத்து நடந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

ஜினிச்சேவ் 2018 முதல் அவசர அமைச்சராக இருக்கிறார் மற்றும் பல ஆண்டுகளாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பாதுகாப்பு விபரங்களைத் தெரிந்த முக்கிய நபராகவும் இருந்து வருகிறார்.

அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி சோவியத் காலத்து கேஜிபியில் தொடங்கி 2016 இல் ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையில் இரண்டாம் இடத்திற்கு உயர்ந்து, நாட்டின் பாதுகாக்கும் பணியில் பணியாற்றினார்.

சம்பவத்தில் 63 வயதுடைய ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் கதை ஆசிரியருமான அலெக்சாண்டர் மெல்னிக இறந்தார். ரஷ்யாவின் வடக்கு கடல் பாதையின் வளர்ச்சி குறித்த ஆவணப்படத்தை திட்டமிட்டிருந்தார்.

No comments