கிளியில் டக்,சிறீ ஆட்கள் ஜக்கியமாகினர்!கிளிநொச்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக டக்ளஸ் அன் கோ பிரச்சாரத்தில் ஈடுபட பதிலுக்கு சிறீதரன் அன் கோ ஒத்தூத களை கட்டியுள்ளது கிளிநொச்சி.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறை ஊழல்களை நிரம்பிவழியும் நிலையில் அதனை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்துள்ளார் டக்ளஸின் புதிய ஆலோசகரும் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நபருமான முகவர் ஒருவர்.

கொவிட் நெருக்கடிக் காலத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கிவருவதாக சொல்லிக்கொள்ளும் கிளிநொச்சி சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள், வடக்கு மாகாணத்திலேயே முன்னுதாரணமான சேவையை வழங்கிவருவதாகவும், மாகாணத்தில் கொவிட் சிகிச்சை வைத்தியநிலையங்கள் பலவும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமையும் அளவுக்கு சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்புமிக்க சேவை அமைந்திருப்பதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

ஆனாலும் வைத்தியசாலை ஊழல்களை அம்பலப்படுத்திவரும் ஊடகவியலாளர் தமிழ் செல்வனை எவ்வாறேனும் முடக்கிவிட காவல்துறை,புலனாய்வு துறையென கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில் ஈபிடிபியும் எதிர்பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது.

ஈபிடிபியின் இத்தகைய பிரச்சாரத்திற்கு சிறீதரனின் நெருங்கிய சகாக்களான கரைச்சி பிரதேச சபை தவிசாளர் ஒத்தூத முற்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

டக்ளஸின் இணை இணை மேலதிக செயலாளர் என சொல்லிக்கொள்ளும் நபரே தற்போது ஊழலை மூடி மறைக்க மொட்டைகடதாசி பாணியில் புறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.


No comments