இதுவெல்லாம் சாதாரணம்?:யாழில் அடித்துக்கொலை!

 

யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவரே இன்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது மரணமடைந்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்

இச்சம்பவத்தில் காயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். மகள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே மரணமடைந்துள்ளார்.


No comments