யாழ்ப்பாணத்திலும் ஒன்பது?
தென்னிலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில், நேற்று (24) மேலும் 9 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், கொடிகாமத்தில் இருவரும், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 24 வயது இளைஞனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment