முள்ளியவளையில் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்!!


முல்லைத்தீவு மாவட்டத்தில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் முள்ளியவளை பிரதேச வர்த்த சங்கமும் தமது ஆழுகையின் கீழ் உள்ள வர்த்தக  நிலையங்களை மூடத்  தீர்மானித்துள்ளதாக  வர்த்தக சங்கத் தலைவர் த.தேவராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28  ஆம் திகதி வரை  வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானித்துள்ளதாகவும், எனவே  மக்கள் இன்றும்(20)   நாளையும்  தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யலாம் "என்றும் தெரிவித்தார். 

No comments