பாடசாலை செல்லவேண்டாம்!இலங்கை கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று ஆசிரியர்களிடம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாடசாலைகளில் பிள்ளைகள் இல்லாத நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அழைப்பது பொருத்தமற்றதெனவும் இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் கோரியுள்ளது.

இதனிடையே ஆசியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் இரு தடவைகளாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.


No comments