மீண்டும் முடங்கும் வடக்கு!கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம்,பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று கிளிநொச்சியில் 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட  விடியல் ஆடைத்தொழிற்சாலையில் 25 பேர் அடங்கலாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே இன்று பருத்தித்துறையில் 4 பேர் உட்பட  யாழ் மாவட்டத்தில் 75 பேர் என்பதுடன் வடமாகாணத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் யாழ் சுகாதார பிரிவில் 20 பேருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் 18 பேருக்கும் தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 10 பேருக்கும் மானிப்பாய் சுகாதார பிரிவில் 9 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 8 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  பருத்தித்துறை வைத்தியசாலையில் 4 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 75 பேருக்கும்,  பலாலி கடற்படையினர் 14 பேருக்கும்,  மன்னார் சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  தருமபுரம் சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  முல்லைத்தீவு சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என வடமாகாணத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments