ஆப்கானில் இலங்கையரை தேடும் அரசு!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்ப விரும்புவதாயின், அவர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்காக சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு தற்போது செயற்பட்டு வருகின்றது.

ஹோட்டலில் இருந்து செயற்படுகின்ற காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தற்போது இலங்கைப் பிரஜைகள் யாரும் இல்லை என்பதுடன், அது உள்ளூர் பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 43 இலங்கைப் பிரஜைகளின் விபரங்கள் தூதரகத்தில் காணப்படுகின்ற அதே நேரத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் சில விவரங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலை குறித்து விளக்கமளிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு தயாராக இருக்கின்ற அதே வேளை, இலங்கைப் பிரஜைகள் நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பினால், அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும். என வெளிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது

No comments