இலங்கை: பதிவு திருமணத்திற்கு அனுமதி!

இலங்கையில் திருமணவிழாக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் மணமக்களது சகோதரர்கள் பங்கெடுக்கலாமென்பது தொடரபில் அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

No comments