ஜடியா இல்லை: சந்திரிகா!

நாமலிற்கு போட்டியாக தனது மகனை அரசியல் களமிறக்கவுள்ளதாக வெளியான செய்தியை சந்திரிகா மறுதலித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக் கூறப்பட்ட கருத்தை மறுத்துள்ளார்.

தனது மகன், அரசியலுக்கு நுழையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்..

அரசியலுக்குள் நுழைவதற்கு மகனுக்கு விருப்பமில்லை. அதேபோல, அரசியலில் நுழைவதற்கான எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் இருக்கும் போது நானும், பண்டாரநாயக்க குடும்பத்தினரும் முகங்கொடுத்தவற்றை, தனது மகனும் முகங்கொடுத்துவிடக் கூடாது என்பதில், தான் மிகக் கவனமாக இருக்கின்​​றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments