மீள முடியாத நெருக்கடியினுள் இலங்கை!மீண்டும் முடக்க நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.

இதனிடையே  இலங்கையில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போதும்கூட பால்மா தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments