உடலங்களால் நிறைந்து வழியும் இலங்கை!


இலங்கையில் கொரோனா மரணம் 5ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சவப்பெட்டிகள் வாகனமொன்றில் மேலே மேலே அடுக்கபட்ட நிலையில் வாகனத்தில் உடலங்கள் எடுத்துச்செல்லப்படும் படம் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மத்துகம மயானத்திற்கு இறந்த உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனிடையே கொழும்பு பொலிஸ் பிணவறை நிரம்பியதால், கொரோனா பிணங்கள் தற்காலிக குளிர் பிணவறைகளில் வைக்கப்படுகின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 25 உடல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் பிணவறைகள் அவற்றின் திறனை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments