ஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார்


இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் ஒலிம்பிக் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து 2021 ஆண்டின் உலகின் வேகமான மனிதராக இத்தாலியின்

லெமென்ட் மார்ஷல் ஜகொப் வலம் வருகிறார்.

அமெரிக்க ஃப்ரெட் கெர்லியை இரண்டாவது இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் வெண்கலத்தை வென்றார்.

கிரேட் பிரிட்டனின் ஜார்னல் ஹியூஸ் தவறான தொடக்கத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உலக சாம்பியன் கிறிஸ்டியன் கோல்மேன் மற்றும் 2021 ல் உலகின் அதிவேக ட்ரேவோன் ப்ரோமெல் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை.

No comments