கறுப்பு பணம் வர புதிய சட்டம்!

 


இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இதனை மேற்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒன்று நாடாளுமன்றத்திலே நேற்று முந்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்டமூலமாகும். அதாவது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வந்திருக்கின்ற நிதியமைச்சர் எடுத்திருக்கின்ற முதலாவது நடவடிக்கை வெளிநாட்டு நிதி தொடர்பானர். யார் கருப்பு பணத்தை கொண்டு வரப்போகின்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments