றிசாத் குடும்பத்திற்கு தொடர்ந்து சிறை:தாயும் கைது?

 


அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமி ஹிசாலினியின் சரீரத்தை மீண்டும் தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகியோரும் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஒகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தான் மறுமணம் செய்து கொண்டு தன்னுடைய மகளை 12 வயதில் கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பி அதில் கிடைத்த வருமானத்தில் தான் உண்டு வாழ்ந்து விட்டு,ரிசாட் வீட்டில் தனக்கு கொடுமை என்று சொன்ன போது தனது மகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்காது 7 மாதங்கள் 2 இலட்சங்களுக்கு மேலதிகமாக தனது மகள் அனுப்பிய பணத்தில் சந்தோசமாக இருந்து விட்டு  ஊடகங்களுக்கு முன் குந்திக் கொண்டு நீதி வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அந்த தாயும் சிறுமியின் மரணத்தில் பங்குதாரர் தான்.அந்த தாய் பிள்ளையை பெற்றெடுத்து இலவசமாக கிடைக்கப் பெறும் கல்வியை கூட பெற்றுக் கொள்ள விடாது; தொழிலாளியாக மாற்றியுள்ளார். ஆக இந்த தாய் மீதும் சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.


No comments