திருகோணமலை விபத்து! பெண் ஆசிரியர் பலி!!


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த பெண்ணின் கணவர் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும், 7 வயதான குழந்தை மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வந்த முச்சக்கர வண்டியின் மீது காரொன்று கட்டுப்பாட்டை மீறி மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

No comments