யாழ்.மாவட்டத்திற்கும் சிங்கள மாவட்ட செயலராம்?யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக, தமிழ் பேச முடியாத ஒருவரை நியமிக்க, ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தொடர்பில், அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில், மிக விரைவில், யாழ். மாவட்டத்திற்கு, தமிழ் பேச முடியாத ஒருவரை, மாவட்ட செயலாளர் அல்லது அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்.

நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ். மாவட்டத்தில் 95 வீதமானவர்கள், தமிழ் பேசும் சமூகத்தினர் ஆவர்.

10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தை சேர்ந்தவர்களும், தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர்.

இந்த பின்னணியில், தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை, மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபராக, யாழ். மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்த மற்ற ஒரு விடயமாகும். இது ஜனநாயக விரோதமான செயலாகும்.


No comments