சனமோ கொட்டிலில்:பலாலியில் மிளகாய் நல்ல விளைச்சலாம்!வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்களது அகதி வாழ்க்கை 35வருடங்களை கடந்துள்ள நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் படையினரால் மிளகாய் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டள்ள நிலையில் ல் படையினரால் பெருமெடுப்பில் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டு சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. இராணுவ தளபதியின் 'துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்நிறைவு அடைவதை  இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 


இதனிடையே பூநகரி சீன கடலட்டை பண்ணையினை பார்க்க கடல் ,களப்பென திரண்ட தமிழ் தலைவர்களில் யார் படையினரின் தோட்டத்தை பார்க்க முதலில் செல்லப்போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.

No comments