இந்தியா பற்றி கதைக்காமல் சீனாவை நோண்டுவதேன்?

 


யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றமை தொடர்பில் வாய் திறக்காதவர்கள் சீனா பற்றி கூக்குரலிடுவதாக இலங்கை அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு விமானநிலையத்தினை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் 

இந்தியா அமெரிக்கா போன்ற பல நாடுகள் உதவி செய்கின்றது. உதவி செய்கின்ற பல நாடுகளில் இருந்து உதவிகளை பெறுகின்றோம். சீனா முன்னிற்பது என கேட்கின்றீர்கள் .ஆனால்  யாராவது   யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றதுஎன்று கேட்கின்றீர்களா? சீன பிரச்சனை எங்களுக்கு இல்லை எதிர்கட்சிக்குத்தான்  எங்களுக்கு எந்தநாடு உதவிசெய்கின்றதே அந்த உதவியைப் பெற்று அபிவிருத்தியை மேற் கொள்ளுவோம இதற்கும் சீனா உதவி செய்ய இருந்தால் நாங்கள் அதனையும் பெற்றுக் கொள்ளுவோம் 

அதேவேளை பசில் ராஜபக்ச பாராளுமன்றம் வந்தால் இந்த பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்ற பாரிய நம்பிக்கை இருக்கின்றது எனவே அவர் வருவது இந்த பிரதேசத்திற்கு மிகவும் நல்லது என்றார்.


No comments