கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 4 வாரங்கள் நீடிக்க இங்கிலாந்து பரிசீலனை


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21 ஆம் திகதி முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே அறிவித்துள்ளார். 

இந்நிலையில் உருமாறிய இந்திய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதை தாமதப்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments