எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு?


 ” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

” எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே தீர்மானித்தது. ஜனாதிபதி, பிரதமர், வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் நாமல் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனவே, இது என்னால் தன்னிச்சை எடுக்கப்பட்ட முடிவல்ல என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கோரப்பட்டிருந்தது. இதன் மூலம் கோத்தா -மகிந்த பிளவு அம்பலமாகியுள்ளது.

No comments