நல்லிணக்கம்!! கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகருடன் உரையாடல்!!


13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துயையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று முற்பகல்  இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இந்திய உயர்ஸ்தானிகரத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது. 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி,அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சித்தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய ஐந்துபேரடங்கிய குழுவினர் பங்கேற்றனர். 

இதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் இந்தியாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார,உட்கட்டமைப்பு அபிவிருத்திட்டங்கள் மீளவும் உத்வேகத்துடன் முன்னேடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அண்மைய கொரோனா காலநெருக்கடிகளால் டெல்லியில் அதுபற்றி விடயங்கள் சற்று மந்த கதியில் இருந்ததாகவும் எதிர்காலத்தில் அவை மிகவும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். 

மேலும், தொழில்நுட்பம், நிதி மற்றும் மூலதனம் ஆகிய துறைகளில் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதற்காகவும் சூரியகல மின்சக்தி துறையில் பாரிய அபிவிருத்தியினை முன்னெடுப்பதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 100மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமையை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், வடக்குகிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார விடயங்களில் அதீத கரிசனை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், பலாலி விமான நிலையத்தினை மீள இயக்குவதன் அவசியத்தினை நாம் வெளிப்படுத்தியபோது, அவ்விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கான மேலும் நிதி உதவிகளைவழங்கவுள்ளதாகவும் சென்னை-பலாலி விமான சேவையை மீள ஆரம்பிபதற்கான நடவடிக்கைளை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பயணிகள் தனிமைப்படுத்தல் விடயத்தில் காணப்படுகின்ற சில விடயங்களால் தாமதங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேநேரம், காங்கேசன்துறை, மன்னார் ஆகியபகுதிகளிலிருந்து தமிழகத்திற்கான படகுசேவையை மீள ஆரம்பிக்குமாறும் நாம் வலியுறுத்தினோம். அதேநேரம், காங்கசேன் துறைமுக மீள் நிர்மாணப்பகிளும் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதற்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 

இதேவேளை, தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள மூவாயிரம் குடும்பங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு அவர்கள் தாயகம் திரும்புவதற்கும் அவர்களுக்கான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் உயர்ஸ்தானிகர் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் என்று சுமந்திரன் மேலும் கூறினார்.

No comments