கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உருவாக்கிய ஜோன் மெக்காஃபி தற்கொலை!!


கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உருவாக்கிய ஜோன் மெக்காஃபி ஸ்பெயின் நாட்டில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இவர் வரி ஏய்ப்புத் தொடர்பான வழக்கில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அருகில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வரி ஏய்ப்பு தொடர்பாக அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கணினி புரோகிராமர் மற்றும் தொழிலதிபரான ஜோன் மெக்காஃபி, 1987 இல் மெக்காஃபி அசோசியேட்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். 1994 ஆம் ஆண்டு பதவி விலகும் வரை அந்த நிறுவனத்தை நடத்தினார். 

2012 ஆம் அண்டு பக்கத்து வீட்டு நபரை கொலை செய்ய கூறியதாக 2019 ஆம் ஆண்டு அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 25 மில்லியன் டொலர் அபராதம் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மெக்காஃபி குற்றச்சாட்டை மறுத்து, பணம் கட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 6 திகதி ஸ்பெயினிலிருந்து துருக்கி செல்ல முன்பட்டபோது ஸ்பெயின் அரசு, வரி ஏய்ப்பு தொடர்பாக அவரைக் கைது செய்தது. 

No comments