துமிந்தவிற்கு ஒன்று:ஆனந்த சுதாகாரனிற்கு இன்னொன்று!

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட  பாதாள உலக பிரமுகர் துமிந்த சில்வா அவர்களுக்கு வெறும் 5 ஆண்டுகளில்  பொது மன்னிப்பு வழங்கபட்டு இருக்கின்றமையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் வலை பதிஞர் ஒருவர் .

சில மாதங்களுக்கு  முன்னர்  ஆயுத வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது .

இதே போல கடந்த ஆண்டு குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது 

நல்லாட்சி காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த பௌத்த மத குருவான ஞானசார தேரரை  அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது 

அதே போல இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞரையும் அவர்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில்  பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது 

ஆனால், இதே நாட்டில்

ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர்  பயங்கரவாத சட்டத்தின் கீழ் 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனை கைதியாக சிறையில் இருக்கின்றார் 

மன்னாரை சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜசீம் அவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக தனது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து வைக்க பட்டு இருக்கிறார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியலாளர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்

பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான  ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார் 

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான  கனகசபை தேவதாசன் அவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு  சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார் 

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவர்கள்  பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்

மேற்குறிப்பிட்டவர்கள் வெறும் உதாரணம் மட்டுமே

இவர்களை போல நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும்  இன்றி பயங்கரவாத சட்ட த்தின் கீழ கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் 

சமூக தளபதிவுகளில் அடிப்படையில் மட்டும் 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மைய மாதங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் 

இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டு இருக்கிறார்கள் 

ஆனால் இவர்கள் யாருமே துமிந்த சில்வா போன்று படுகொலைகளில் எடுபடவில்லை .  

போதைவஸ்து கடத்த வில்லை 

பாதாள உலக முகவர்களாக செயல்படவில்லை ..

ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல 

இன்றைக்கு விடுதலை செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகள் போன்று பயங்கரவாத சட்ட பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரும்  விடுதலை செய்ய பட வேண்டும் . 

அதே போல பயங்கரவாத சட்டமும் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.

No comments