அல்லைப்பிட்டி : வெள்ளையடிக்கும் அனுர அரசு!



யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்திருந்தான்.

சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றிருந்தது.

துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது முன்னதாக சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தான்.

இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் வீதி தடையினை தாண்டி செல்ல முற்பட்ட வாகனம் மீது பின்னாலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.


No comments