துமிந்த சில்வா பொதுமன்னிப்பு!! அமெரிக்கா விசனம்


உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட துமிந்த சில்வா பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவமான நீதி ஆகியவை உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

No comments