நல்லாட்சி நட்டாற்றில் கைவிடப்பட்ட ஷானி அபேசேகர பிணையில்!நல்லாட்சி கும்பலால் நட்டாற்றில் கைவிடப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலை வழக்கொன்றுடன் தொடர்பில், போலியான சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில், அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தம்மை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் கம்பஹா மாவட்ட நீதிமன்றங்களில், முன்னதாக அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகளினால் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments