இஸ்ரேலுக்கு அனுப்பட்ட பலூன்களை அடுத்து ஹசா மீது மீண்டும் வான் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேல்!


காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா நகரில் இன்று புதன்கிழமை அதிகாலையில் வெடிப்புகள் கேட்டன.

செவ்வாய்க்கிழமை முன்னதாக காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு பல பலூன்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

மே 21 அன்று நடந்த போர்நிறுத்தம் 11 நாட்கள் சண்டையை முடித்த பின்னர் நடத்தப்பட்ட முதல் தாக்குதலாகும்.

ஒரு அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (ஐ.டி.எஃப்) கான் யூனிஸ் மற்றும் காசா நகரத்தில் ஹமாஸால் இயக்கப்படும் இராணுவ வளாகங்களை போர் விமானங்கள் தாக்கியுள்ளன எனக் கூறியுள்ளன.

அந்த வளாகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தன என்றும், காசா பகுதியிலிருந்து தொடர்ச்சியான பயங்கரவாதச் செயல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், யுத்தம் மீண்டும் தொடங்குவது உட்பட அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஐடிஎஃப் தயாராக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.

வான்வழித் தாக்குதல்களில் எந்தப் பாலஸ்தீனியர்களும் காயமடையவில்லை என்று ஹமாஸுடன் இணைந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசாவிலிருந்து ஏவப்பட்ட பலூன்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள வயல்களில் வீழந்ததில் குறைந்தது 20 தீ விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலின் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

No comments