வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!


பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேனவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவிறும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

நிதி இராஜாங்க அமைச்சராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியின் கீழ் கொழும்பு துறைமுக நகரம், முதலீட்டு சபை உட்பட தற்போது நிதி அமைச்சின் கீழ் நிறுவனங்கள் பல உள்ளடக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பைச் சேர்ந்த வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சரின் பதவி பறிபோகக்கூடும் என தெரியவருகிறது

இதேவேளை, தனக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை வழங்குமாறு முன்னளாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கோரிக்கை விடுத்ததாகவும், அரசாங்கம் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகால அரசாங்கம் பதவியேற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதான அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படும் என அதிகளவில் பேசப்பட்டது.

இதேவேளை, தற்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் போது சிலரின் அமைச்சுப் பதவிகள் பறிபோகலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சரின் பதவி பறிபோகக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

No comments