யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் அனுமதியின்றி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வை நடாத்தியிருந்தனர்.

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இன்று   13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் திருமண வீட்டில் பங்கெடுத்த அனைவரையும மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


No comments