வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர்

சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னாலேயே துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளது. இன்று மாலை 6 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பொதுமகன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் மணல் லொறியொன்றின் சாரதியே என காவல்துறையினர் விசாரணையின் பின் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேநேரம் சம்பவம் இடம்பெற்ற வேளை வியாழேந்திரன் வீட்டில் இல்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரின் சரணடைந்த மெய்ப்பாதுகாவலர்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் பதற்றமான சூழல் தொடர்கின்றது.

No comments