திருநெல்வேலிக்கு முன்னுனுரிமை!அதிகளவு கொரோனா இனங்காணப்பட்ட பகுதிகளிற்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் திருநெல்வேலி கொத்தணிப் பகுதிகளுக்கு இன்று தொடக்கம் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரமபிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டுள்ளது. 

இன்றும் நாளையுமாக (02) ஆகிய இரண்டு தினங்களில் திருநெல்வேலி மேற்கு கிராமசேவையாளர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நல்லூர் சிவனம்மன் வீதியில் உள்ள கிராம அலுவலர் காரியாலயத்தில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. 

பின்னர்  3 ஆம் 4 ஆம் திகதிகளில் திருநெல்வேலி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்டவர்களுக்கு  முத்துத்தம்பி வித்தியாலயத்தில் தடுப்பூசி ஏற்றப்படும். இங்கு முடக்கப்பட்ட பாற்பண்ணை கிராமமும் குறித்த பகுதிக்குள்ளேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. 


No comments