யாழில் நேற்றும் மூவர் மரணம்!



யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.

ஊயிரிழந்தவர்களது உடலங்கள் பாதுகாப்பாக இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.

No comments