திருமலையில் 42 கர்ப்பிணிகளிற்கு கொரோனா!

 


திருகோணமலை மாவட்டத்தில் 42 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றுடன் இன்று திங்கட்கிழமை வரை இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மே மாதம் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும்; திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்;.

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட நல்லூர் அரசடி பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலை மீறிவெளியேறியமை, மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஜவர் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரை எதிர்வரும் 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments