தமிழரசு இளந்தலைவர் பிரிவு!முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையிலும், துடிப்போடு செயலாற்றிய செயற்பாட்டாளன் ஒருவன் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளான்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அமைப்பின் முன்னாள் தலைவரும், பூநகரி பிரதேசபையின் தமிழரசுக்கட்சி சார்பு இளம் உறுப்பினருமான ஜெயகாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்இயற்கை எய்தியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது முள்ளந்தண்டில் செல் துண்டு பட்டமையினால் நோய் வாய்பட்டிருந்த இவர் அதற்கான சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை பெற்றிருந்த வேளையில் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments