முதலில் சுமா பழைய கணக்கினை காட்டட்டும்!யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 10,000 ஊசிகளை வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊசி விநியோகம் மந்த கதியில் நடப்பதாலேயே 10ஆயிரம் ஊசிகளை திருப்ப திட்டமிடப்பட்டதாக தெரியவருகின்றது.

சுகாதார அதிகாரி பணிமனைகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் கூட்டிணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியமையாலேயே இம்முடிவை சுகாதார மைச்சு எடுத்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே வடகிழக்கிற்கு ஊசிகளை வழங்க நிதி இல்லையாயின் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தரப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடையே பேசுகையில் புலம்பெயர் மக்களிடமிருந்து பணம் பெற்று இலங்கைக்கு தடுப்பூசி பெற்று வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள தமிழரசு கட்சி மகளிரணியினர் கனடாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்;ட மக்களிற்கு என சுருட்டிய பணத்திற்கான கணக்கிணை முதலில் காண்பித்து அடுத்து ஊசிக்கான வசூலை முன்னெடுக்கலாமென தெரிவித்துள்ளனர்.


No comments