மரதன் ஓட்டப் போட்டியின் போது ஆலங்கட்டி மழை! போட்டியாளர்கள் 21 பேர் பலி!

சீனாவின் வடமேற்கே கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 172  போட்டியாளர்களில் குறைந்தது 21 பேர்

உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை நண்பகன் மஞ்சள் நதி கல் வனத்தில் பகுதியில் 100 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. 

திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் அங்கு ஆலங்கட்டி மழை, உறை பனி மற்றும் காற்றுடன் கூடிய மழை காரணமாக போட்டியாளர் உயிரிழந்துள்ளனர்.

போட்டியாளர்கள் 31 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்த நிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தையடுத்தே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது.

மீட்புக்குழுவை அனுப்பியதன் மூலம் 151 போட்டியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளளனர் என சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments