தம்பகாமம் இன்னாசி குளப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு!!


கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை தம்பகாமம் இன்னாசி குளப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தம்பகாமம் பகுதியை சேர்ந்த  47 வயதுடைய பொன்னையா வனஜா  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பெண் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடப்பட்ட நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த பெண்ணின் சகோதரரால் குறித்த பெண்ணின் சடலம் குளத்தில் இணங்கானப்பட்டுள்ளதாக பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த பளை காவல்துறையினரும் இராணுவத்தினரும் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டுள்ளனர்.No comments