சாம் தொகுதியல்ல:அனலைதீவு முன்மாதிரி!வாழும் வீரர் இரா.சம்பந்தனை தெரிவு செய்த திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர் இயந்திரத்திற்கு தெண்டிக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின  அனலைதீவில் வைத்தியசாலையின் மகப்பேற்று, நோயாளர் விடுதிகளின் அவசர திருத்த வேலைகளிற்கு அறக்கொடை அளித்து நிகர் காட்டியுள்ளார் பொதுமகன் ஒருவர். அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரியினது கோரிக்கையின் பேரில் அனலை ஐயனார் ஆலய பொருளர் வாமதேவனதும் திருத்த  மற்றும் சிரமதான பணிகளில் உள்ளூர் தொண்டர்களதும் சிறந்த முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய பிரதேசங்களும் இதனை பின்பற்ற வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடல் கடந்த இத்தீவில் ஏற்படக் கூடிய மருத்துவ நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாகிய நாமும் அனலைதீவு பொறுப்பு வைத்திய அதிகாரியும் விடுத்த வேண்டுகோளை ஏற்று கிராம சேவையாளருடைய ஒருங்கிணைப்பில் உடனடியாக தன் சொந்த நிதியில் அறக்கொடை தந்து பணிகளை ஆரம்பிக்க உதவியும் கட்டில் மெத்தைகளை கொள்வனவு செய்தும் உதவிய வாமதேவன் ஐயாவிற்கும் முழு மூச்சாக உழைக்கும் அனலை இளைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார்.
No comments