செம்மணி:அடித்துக்கொலைகளா?



செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே  இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், அங்கு மொத்தமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் சிறுவர் உட்பட 9 பேரின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 327 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் அதிக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட மன்னார் சதோசா மனிதப் புதைகுழி மொத்தமாக 376 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 22 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (11-06-2026) வியாழக்கிழமை நடைபெற்றன.

இன்றைய அகழ்வின்போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் 341 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 327 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மனித என்புக்கூட்டுக் குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட என்புக்கூட்டுக் குவியல் இதுவரையிலான அகழ்வுப் பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட மனித என்புக்கூட்டுக் குவியல்களில் 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments