டெல் அவிவ் மற்றும் துபாய் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை இரத்து செய்தது ஏர் கனடா


ஏர் கனடா நிறுவனம், டெல் அவிவ் மற்றும் துபாய் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக, டெல் அவிவ் மற்றும் துபாய்க்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் அக்டோபர் 24 வரை ஏர் கனடா நிறுவனம் தனது இடைநிறுத்தத்தை மேலும் நீட்டித்துள்ளது என்று அதன் இணையதள அறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்திய அறிவிப்புக்கு முன்பு, அந்த விமான நிறுவனம் இரு நகரங்களுக்குமான சேவைகளை செப்டம்பர் 8 வரை இரத்து செய்திருந்தது.

No comments