பூநகரி:சிங்கள அதிகாரி பலி!

 


கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி  ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்


அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த வனவள திணைக்கள அதிகாரி கிளிநொச்சி ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது

நேற்று மாலை காவல்துறை விசாரணை அதிகாரிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, அந்த அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து காணாமல் போன நபரின் கைபேசி கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அருகிலிருந்த கிணற்றை பரிசோதித்த போதே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments